உர மானியத்திற்கு பதிலாக மற்றுமொரு மானியம்: விவசாயிகளுக்கு வெளியான தகவல்
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Ministry of Agriculture
By Dilakshan
எதிர்காலத்தில் உர மானியத்தை நிறுத்திவிட்டு பயிர் செய்கை மானியத்தை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறுபோக காலத்தில் வயல்களில் பயரிடப்படும் மேலதிக பயிர்களுக்கு ரூ.15,000 மானியம் வழங்கவுள்ளதாக ஜனாதிபதியும் இன்று அறிவித்திருந்தார்.
பயிர்ச்செய்கை பாதிப்பு
இவ்வாறானதொரு பின்னணியில், அரசாங்க உர மானியங்கள் இல்லாததால், பல பகுதிகளில் விவசாயிகள் தற்போது கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பல ஏக்கர் நெல் வயல்களின் பயிர் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாயிகள் சங்கத்தின் தவிசாளர் அனுராதா தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி