மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு! இலங்கை முழுவதும் அவசர காலச்சட்டம்! ரணில் அதிரடி உத்தரவு
ஊரடங்கு
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு, வன்முறையை தூண்டும் வகையில் சட்டம் ஒழுங்கை மீறுவோரை கைதுசெய்ய படையினர் மற்றும் காவல்துறையினருக்கு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் பதற்றம்
கொழும்பு - பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு ஆயிரக்கணக்கான மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.
இருப்பினும், அப்பகுதியில் பாரியளவான மக்கள் கூட்டம் திரண்டுதால் படையினரால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், மேல் மாகாணத்தில் காவல்துறை ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி, பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைய ஆர்ப்பாட்காரர்கள் முயற்சி! போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை- நீர்த்தாரை பிரயோகம்