யாழ். போதனா வைத்தியசாலையின் தற்போதைய நிலை!
வடக்கில் முக்கியமான மற்றும் மக்களுக்கு தேவையுடைய ஒரு பிரதான தளமாக யாழ் போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) காணப்படுகின்றது.
இந்தநிலையில், அண்மைக்காலமாக யாழ் போதனா வைத்தியசாலை மீதான மக்களின் நம்பிக்கை அதிருப்திக்குள்ளாகியுள்ளது.
அத்தோடு, தொடர்ந்து பல தரப்பட்ட சர்ச்சைகளுக்கு வைத்தியசாலை முகம் கொடுத்து வந்த நிலையில், இது வைத்தியசாலைக்கு அவப்பெயராக அமைந்ததுடன் மக்களின் நம்பகத்தன்மை இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் நடந்துகொள்ளும் விதம், மக்களை நடத்தும் விதம் மற்றும் வழங்கப்படும் மருந்துகள் தொடர்பில் தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இதனால், மக்களும் தமது விமர்சனங்களை முன்வைத்து வந்ததுடன் சமூக வலைதளங்களிலும் இது தொடர்பில் கருத்துக்கள் பரவி வைத்தியசாலை பெயர் முற்றிலும் சிதைவுக்குட்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், இவ்வளவு விமர்சனங்களுக்கான காரணம் என்ன ?, மக்கள் மத்தியில் எதற்காக வைத்தியசாலை மீதான அதிருப்தி ?, வைத்தியசாலையில் உண்மையில் நடப்பது என்ன ?, மற்றும் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு வைத்தியசாலை நிர்வாகத்தின் பதில் என்ன ? என்பது குறித்து களத்தில் இறங்கி நேரடியாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் மருத்துவம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
