தமிழரசுக் கட்சி மீதான பிற கட்சிகளின் நிலைப்பாடு: சி.வி.கே.சிவஞானம் அளித்த பதில்

Ilankai Tamil Arasu Kachchi Sri Lanka Politician Sri Lanka
By Harrish Apr 25, 2025 11:17 AM GMT
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒற்றையாட்சி முறைமையை ஏற்றுக்கொள்ள மாட்டாது என்பதுடன் அவற்றை முழு வீச்சில் எதிர்க்கும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சி முறைமையை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதாக அண்மைய தேர்தல் பரப்புரை கூட்டங்களில் எதிர்தரப்பினரால் தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒற்றையாட்சியை ஆதரிக்கிறது என்னும் கருத்தை நாம் தெளிவாக மறுத்துள்ள போதும் சிலர் பொது வெளியில் தொடர்ந்து பேசுகின்றனர்.

யாழ். தெல்லிப்பளையில் உள்ள மகளிர் இல்லத்தில் யுவதி உயிரிழப்பு

யாழ். தெல்லிப்பளையில் உள்ள மகளிர் இல்லத்தில் யுவதி உயிரிழப்பு

ஒற்றையாட்சி

முதலில், ஒற்றையாட்சியை ஏனைய அரசியல் கட்சிகள் ஏற்றுநின்ற காலகட்டத்தில் அதனை மறுதலித்து சமஷ்டி முறையான அரசமைப்பை கோரி உருவாக்கப் பட்டதே , சஷ்டிக் கட்சி என்றும் அழைக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தமிழரசுக் கட்சி மீதான பிற கட்சிகளின் நிலைப்பாடு: சி.வி.கே.சிவஞானம் அளித்த பதில் | Cvk Says Itak Party Will Not Accept Unitary Rule

மேலும், ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவோ, அவரது கட்சி சார்ந்த அமைச்சர்களோ அல்லது ஜே.வீ. பீ கட்சியின் முக்கியர்த்தர் எவருமோ " ஏக்கிய ராஜ்ய " என்ற சொற்கள் அடங்கிய அரசியல் அமைப்பு வரைவில் இருந்து புதிய வரைபை தொடரலாம் என்று எந்த இடத்திலும் கூறவில்லை.

அப்படிக் கூறி இருந்தால் நாம் அதனை ஏற்பதாகக் கூறியதாக சொல்பவர்கள் அவர்கள் எங்கே எப்பொழுது, கூறினார்கள் என்பதையும் நாம் எப்பொழுது எங்கே அவ்வாறு ஏற்பதாக கூறினோம் என்பதையும் ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும்.

அதை விடுத்து பொத்தம் பொதுவாக சகட்டு மேனிக்கு பேசுவது பொருத்தம் அற்றதும் அபத்தமானதும் ஆகும்.

பாடசாலையில் திடீரென மயங்கி வீழ்ந்த மாணவி உயிரிழப்பு : தமிழர் பகுதியில் துயரம்

பாடசாலையில் திடீரென மயங்கி வீழ்ந்த மாணவி உயிரிழப்பு : தமிழர் பகுதியில் துயரம்

தமிழரசுக் கட்சி

'ஏக்கிய ராஜ்ய' என்ற சொற்பதம் பற்றி 2019 ஆம் ஆண்டுக்குப் பின்பு சிங்களவர் எவரும் பேசுவது இல்லை. அது அரசாங்கத்தினாலும் எம்மாலும் எப்போதோ கைவிடப்பட்ட ஒன்று.

ஆனால், இங்கே மட்டும் இல்லாத ஒரு ஊருக்கு பெயர் வைப்பது போன்று இதனை காழ்ப்புணர்வு காரணமாக தமிழரசுக் கட்சியின் பெயரைக் கெடுக்கும் நோக்கில் மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள்.

தமிழரசுக் கட்சி மீதான பிற கட்சிகளின் நிலைப்பாடு: சி.வி.கே.சிவஞானம் அளித்த பதில் | Cvk Says Itak Party Will Not Accept Unitary Rule

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற ரீதியிலும் கட்சியின் மிக சிரேஸ்ட நிலையில் உள்ளவன் என்ற வகையிலும் கட்சியின் கொள்கை வகுத்தலில் முக்கியபங்கு வகிப்பவன் என்ற வகையிலும் எமது கட்சி ஒற்றையாட்சி முறைமையையோ " ஏக்கிய ராஜ்ய " என்ற முறைமையையோ ஏற்றுக்கொள்ள மாட்டாது மட்டுமல்ல அவற்றை முழு வீச்சில் எதிர்க்கும் என்பதையும் தெரிவித்துகொள்கின்றேன்.

பிள்ளையானை சந்திக்க பாடுபடும் ராஜபக்சர்கள்: அநுர தரப்பு வெளிப்படை

பிள்ளையானை சந்திக்க பாடுபடும் ராஜபக்சர்கள்: அநுர தரப்பு வெளிப்படை

நாடாளுமன்றத்தில் எதிர்வாதம்

அவ்வாறு ஏதாவது முன்மொழிவு அரசினால் முன்வைக்கப்பட்டால் அதனை எமது எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் எதிர்வாதம் செய்து எதிர்த்து வாக்களிப்பார்கள் என்றும் ஏற்கெனவே நான் கூறி இருக்கிறேன் இதனை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இந்தக் கருத்தை தெரிவிக்கும் பொறுப்பும் உரிமையும் எனக்கு உண்டு என்பதையும் திடமாக வலியுறுத்துகிறேன்.

தமிழரசுக் கட்சி மீதான பிற கட்சிகளின் நிலைப்பாடு: சி.வி.கே.சிவஞானம் அளித்த பதில் | Cvk Says Itak Party Will Not Accept Unitary Rule

ஒருவேளை நான் ஒரு மேட்டுக்குடி சாராதவன் என்பதால் யாராவது மேட்டுக்குடி சார்ந்தவர்தான் சொல்ல வேண்டும் என நினைக்கிறார்களோ தெரியவில்லை. அவர்களுக்கு எல்லாம் நான் கூறிக்கொள்வது இலங்கைத் தமிழரசுக் கட்சி சாமானிய மக்களுக்கானது. 

அவர்களில் ஒருவன் நான் ஆயினும் எந்த மேட்டுக்குடியினர்க்கும் குறைந்தவனும் அல்ல, நீங்கள் எதிர்பார்ப்பது போல இனிமேல் எந்த மேட்டுக்குடி மேலாதிக்ககாரரும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இறக்குமதி செய்யப்பட மாட்டார்கள் என்பதையும் ஆணித்தரமாக பதிவு செய்கிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ உத்தியோகத்தரை திட்டிய காவல்துறை அதிகாரி : வெடித்தது சர்ச்சை

இராணுவ உத்தியோகத்தரை திட்டிய காவல்துறை அதிகாரி : வெடித்தது சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024