சி.வி.கேயின் செயற்பாடு நியாயமற்றது! கொந்தளித்த சிறீதரன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தாக்கல் செய்துள்ள முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழல் இல்லை என நீதித்துறை குறிப்பிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பில் திருகோணமலையில் இன்று (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏற்கனவே மாவை சேனாதிராஜா உயிரோடு இருக்கும் போது இந்தக் கட்சியினுடைய தலைவராக தன்னுடைய மறுமொழியை அவர் சமர்ப்பணம் செய்திருந்தார்.
மாவை சேனாதிராஜா மறுமொழி சமர்ப்பணம்
ஒரு வழக்கிற்கான தலைவர் என்ற அந்தஸ்தோடு ஒருவர் ஒரு முறை அந்த வழக்கை பதிவு செய்திருந்தார். அவர் இறந்த பிற்பாடு பதில் தலைவராக இருக்கின்ற ஒருவர் பதிலீட்டு மனுவாக ஒன்றை சமர்ப்பிக்க முடியாது.

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கொடுத்த மறுமொழி தான் அங்கீகாரமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நீதிமன்றத்தில் இருக்கக் கூடிய நிலையில் பதில் தலைவராக சி. வி. கே. சிவஞானத்தினுடைய முறையீடும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
அது ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சூழலும் இல்லை. அதற்கான வாய்ப்புக்களும் இல்லை என்று நீதித்துறை சொல்லுகின்றது” என தெரிவித்தார்.
மேலதிக தகவல் - தொம்ஷன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |