இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று(25.11.2025) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன்,
வழக்கு தாக்கல்
“குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இடைபுகுணர் வருவதற்கு கொடுக்கப்பட்ட அவகாச காலத்துக்கு பிறகு பரமாணந்தம் என்ற ஒருவர் விண்ணப்பம் செய்துள்ளார்.

குறித்த விண்ணப்பம் காலாவதியான ஒன்று என எமது தரப்பு நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆட்சியபனைகளை தாக்கல் செய்வதற்காகவே இன்று நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளோம்.
எமது ஆட்சியபனையின் பிரதான கருப்பொருள் என்னவென்றால், குறிதத்த வழக்கை காலம் கடத்த எதிராளிகளால் காலம் கடந்து இடைப்புகுணர் என்ற ஒருவர் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் மாவட்ட நீதிபதி விடுமுறையில் இருப்பதால் வழக்கு எதுவும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. இதன் காரணமாக வழக்கானது எதிர்வரும் ஆண்டு மார்ச் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.
செய்தி - தொம்ஷன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |