கோட்டாபயவிடமிருந்து கிடைக்காத சாதகமான பதில்! அரசாங்கத்திலிருந்து வெளியேறும் இ.தொ.க
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தனது இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரசாங்கத்திலிருந்து வெளியேற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ள நிலையில், நாடாளுமன்றத்திலும் ஆதரவு வழங்காதிருக்க தீர்மானித்துள்ளது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடன் நேற்று இரவு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது.
குறிப்பாக மலையகத்திற்கான பல்கலைக்கழகம், ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினை, ஆசிரியர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அரச தலைவர் அதற்கு சாதகமான பதிலை வழங்கியுள்ளார்.
எனினும், அரசாங்கத்திற்கு எதிர்கால திட்டமொன்று இல்லாமையினால், அதிருப்தி கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

