இணைய குற்றச் செயல்கள் : இரண்டு மாதங்களில் பதிவான பாரிய முறைப்பாடுகள்
இவ்வருடம் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடையில் இணைய குற்றச் செயல்கள் தொடர்பான 9,000 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவின் பொறியியலாளர் சாருகா தமுனுபொல, இணையக் குற்றச் செயல்களில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.அண்மைக்காலமாக 9,000க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருகி வரும் இணைய அச்சுறுத்தல்கள்
கவலையளிக்கும் வகையில், இந்த சம்பவங்களில் 80வீதம் சமூக ஊடக தளங்களை உள்ளடக்கியது, இதனால் ஒன்லைனில் பயனர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இணைய அச்சுறுத்தல்கள் தொடர்ந்து பெருகி வருவதால், தனிநபர்களும் நிறுவனங்களும் விழிப்புடன் இருப்பதும், சாத்தியமான இணையத் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள செயலூக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் முக்கியம்.
சிறுவர்களை இலக்கு வைத்து ஒன்லைனில் பாலியல் வன்கொடுமை
20 வீத வழக்குகள் குறிப்பாக சைபர் கிரைம் தொடர்பானவை என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அதே நேரத்தில் 1,400 வழக்குகள் ஒன்லைன் மோசடிகளுடன் தொடர்புடையவை என்று தமுனுபொல கூறினார்.
சிறுவர்களை இலக்கு வைத்து ஒன்லைனில் பாலியல் வன்கொடுமை செய்த 40 வழக்குகளுடன் சேர்த்து, சிறுவர்கள் மீதான சைபர் மிரட்டல் தொடர்பாக மொத்தம் 85 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |