மீண்டும் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம்! (படங்கள்)
mullaitivu
explosion
cylinder gas
By Thavathevan
நாட்டில் எரிவாயு இல்லாது மக்கள் நீண்ட வரிசையில் அதனைப் பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்து வருகின்றனர்.இந்நிலையில் மீண்டும் எரிவாயு அடுப்பு வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றது.
முல்லைத்தீவில் செல்வபுரம் பகுதியில் இன்று நண்பகல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
செல்வபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் சமைத்துக் கொண்டிருந்த போது அடுப்பு வெடித்துள்ளது சமையலில் ஈடுபட்டவர் அடுப்புக்கு அருகில் இல்லாத காரணத்தினால் அவர் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை.
மீண்டும் இவ்வாறான வெடிப்பு சம்பவங்கள் பதிவாகின்றமையானது மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி