ஆட்டத்தை ஆரம்பித்தார் பசில் -வெடித்தது மோதல்
பசிலின் ஆட்டம் ஆரம்பம்
தென் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பதவியில் இருந்த கிரிஷாலி முத்துக்குமாரை உடனடியாக நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக அருண குணரத்ன என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தலையிட்டுள்ளதாகவும் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, கிரிஷாலி முத்துக்குமாரை குறித்த தலைவர் பதவிக்கு நியமிக்க சிபாரிசு செய்ததுடன், அமைச்சர் கஞ்சன விஜேசேகரவும் அவருக்கு ஆதரவளித்திருந்தார்.
உடனடியாக நீக்குமாறு அறிவித்தல்
இதேவேளை, மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோரின் பரிந்துரையின் அடிப்படையில் தென் மாகாண சபையின் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக நீக்குமாறு பசில் ராஜபக்ஷ அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
