புதிய உலக சாதனை படைத்த இலங்கை சுழற்பந்து வீச்சாளர் : குவியும் வாழ்த்துகள்
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க(wanindu hasaranga), ஒரு நாள் சர்வதேச (ODI) வரலாற்றில் வேகமாக 100 விக்கெட்டுகள் மற்றும் 1000 ஓட்டங்கள் என்ற இரட்டைச் சாதனையை எட்டியதன் மூலம் சாதனை புத்தகங்களில் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார்.
நேற்று (05)சனிக்கிழமை பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது 27 வயதான அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஹசரங்க 65 போட்டிகளில் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டினார், 68 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய தென்னாபிரிக்காவின் முன்னாள் சகலதுறை வீரர் ஷோன் பொலக்கின் சாதனையை ஹசரங்க முறியடித்தார்.
சாதனையில் நுழைந்த 70வது வீரர்
இந்த சாதனையின் மூலம், ஒருநாள் வரலாற்றில் 100 விக்கெட்டுகள்–1000 ஓட்டங்கள் என்ற சாதனையில் நுழைந்த 70வது வீரர் ஹசரங்க ஆவார்.
இரண்டு மைல்கற்களையும் எட்டிய ஒரே கிரிக்கெட் வீரர்
தொடரின் முதல் ஒருநாள் போட்டியின் போது ஹசரங்க ஏற்கனவே 1000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லைத் தாண்டியிருந்தாலும், இரண்டாவது போட்டியில் அவர் தனது 100வது ஒருநாள் விக்கெட்டை கைப்ப்பறினார். ஒருநாள் போட்டியில் இரண்டு மைல்கற்களையும் எட்டிய ஒரே கிரிக்கெட் வீரர் தென்னாபிரிக்காவின் பொலக்(Shaun Pollock) ஆவார்.
புதிய உலக சாதனை படைத்த வனிந்து ஹசரங்கவிற்கு இலங்கை அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடந்து வரும் ஒருநாள் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
