பாரம்தூக்கியில் சிக்குண்ட ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு
Sri Lanka Police
Sri Lanka
Central Province
Accident
By Dharu
தம்புள்ளை கண்டலம் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்று (20) மாலை பாரம்தூக்கி (போர்க்லிப்ட் ட்ரக்) வாகனத்தில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் அதே தொழிற்சாலையில் கனரக சாரதியாக கடமையாற்றியவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தம்புள்ளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி