பெண்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல்:காவல்துறையினரின் நடவடிக்கை ஆரம்பம்
இலங்கையின் பல பகுதிகளில் பெண்களை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் சென்று கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தி தங்க நகைகளை திருடும் கும்பலை கைது செய்ய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கொள்ளைச் சம்பவங்கள் நுகேகொட(Nugegoda), மஹரகம(Maharagama), களுத்துறை(Kalutara ), கல்கிஸ்ஸ(galkissa), பிலியந்தலை(Piliyandala), பண்டாரகம(Bandaragama) உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெறுவதாக காவல்துறையினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் இது தொடர்பான திருட்டில் ஈடுபட்ட சந்தே நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணை
இதன்போது,கம்புருகமுவ பகுதியை சேர்ந்த படா என அழைக்கப்படும் ஜானக சஞ்சீவ என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் பின்னர் திருடப்பட்ட 19 தங்க சங்கிலிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவா(nihal talduwa) தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |