எப்போதும் உங்கள் முகம் கருப்பா இருக்கா... இதை மட்டும் செய்யுங்கள் உடனடி பலன்
பொதுவாக இன்றைய காலத்தில் பலருக்கும் பணிச்சுமை காரணமாக அழகு நிலையங்களுக்கு சென்று தங்கள் சருமத்தைப் பராமரிக்க முடிவதில்லை. இதனால் முகம் பொலிவிழந்து, கருமையடைந்து காணப்படும்.
இதனை போக்க வேண்டுமாயின் தினமும் இரவு தூங்கும் முன் ஒருசில ஃபேஸ் பேக்கை முகத்திற்கு போடுங்கள்.
அதுவும் வீட்டின் சமையலறையில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடமுடியும். அந்தவகையில் சில எளிய ஃபேஸ்களை இங்கே எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
ஒரு பௌலில் கடலை மாவை சிறிது எடுத்து, அத்துடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
5 பாதாமை அரைத்து பொடி செய்து, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவு செய்து வந்தால், முகம் எப்போதும் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
நன்கு மசித்த பப்பாளியுடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். சந்தனத்தின் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு தக்காளி துண்டை எடுத்து, முகத்தில் சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
