நான்கு முறை சிறை சென்ற நாமலின் பலரும் அறியாத கறுப்புப் பக்கங்கள்

Mahinda Rajapaksa Namal Rajapaksa India Law and Order
By Independent Writer Sep 05, 2026 10:18 AM GMT
Report

இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத முக்கிய குடும்பங்களில் ஒன்றான ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது அரசியல் பயணத்தில் பல்வேறு நிதி குற்றச்சாட்டுகளையும் சட்டரீதியான சவால்களையும் எதிர்கொண்டு வருகிறார்.

2016 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், அவர் சந்தித்த நான்கு முக்கிய கைது நடவடிக்கைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய வழக்குகள் விசாரணைகளின் தற்போதைய நிலை மிக விரிவாக பேசப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்தியாவின் கிரிஷ் குழுமத்திடமிருந்து கொழும்பு கோட்டையில் சொகுசு குடியிருப்பு வளாக திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை மையமாக கொண்டு பெறப்பட்ட 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை நிதி முறைகேடு செய்ததாக நாமல் ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டது.

குறித்த பணம் விளையாட்டு மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் அது முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவினரால் 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதுடன் இந்த வழக்கு தொடர்பான சட்ட போராட்டங்கள் மற்றும் விசாரணைகள் நீதிமன்றத்தில் இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இரண்டாவது ஹலோ காப் நிறுவன முதலீட்டு வழக்கு, சட்ட விரோதமாக ஈட்டப்பட்ட 70 மில்லியன் ரூபாய் பணத்தை ஹலோ காப் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து அதன் மூலம் சட்டவிரோத பணத்தை சலவை செய்ததற்காக நாமல் ராஜபக்ச மீது மற்றுமொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

2016 ஆம் ஆண்டு நிதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். நீண்ட கால நீதிமன்ற விசாரணைகளுக்கு பிறகு குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமன்றி நிரூபிக்கப்பட்டதால் 2023ஆம் ஆண்டு கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் அவர் இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார்.

மூன்றாவது அம்பாந்தோட்டை துறைமுக போராட்ட வழக்கு, அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிராக 2017ஆம் ஆண்டு கூட்டு எதிரணியினரால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீதிமன்ற தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் அப்போது கைது செய்யப்பட்டார்.

அரசியல் ரீதியாக மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

நான்காவது சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முறை கேடு வழக்கு - தேசிய விமான சேவையான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற நிதிமுறைகேடுகள் ஒப்பந்த புனரமைப்புகள் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாமல் ராஜபக்ச தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான சேவை தொடர்பிலான நிதி நிர்வாக குழறுபடிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன் சட்டரீதியான விசாரணைகளும் வழக்கு நடவடிக்கைகளும் தற்போது தொடர்ந்து வருகின்றன.

நாமல் ராஜபக்ச மீதான இந்த வழக்குகள் அவர் மீதான அரசியல் விமர்சனங்களுக்கும் சட்டரீதியான சவால்களுக்கும் பிரதானமான காரணங்களாக அமைந்து காணப்படுகிறது.

ஒரு வழக்கில் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும் ஏனைய வழக்குகள் நிலுவையில் இருப்பது அவரது எதிர்கால அரசியல் பயணத்தில் முக்கிய செல்வாக்கை செலுத்தும் காரணியாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கை நாட்டில் மிக மோசமான அரசியல் சூழலையும் மக்களை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளும் தள்ளிய இந்த ராஜபக்ச குடும்பம் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பலரின் விருப்பமாகும்.

இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....


சர்வதேசத்தின் மிகப்பெரிய இலஞ்ச ஊழலில் நாமல்! கவனம் பெறும் பிரித்தானிய நீதிமன்ற அறிக்கை

சர்வதேசத்தின் மிகப்பெரிய இலஞ்ச ஊழலில் நாமல்! கவனம் பெறும் பிரித்தானிய நீதிமன்ற அறிக்கை

விசாரணைகளை எதிர்கொள்ள தயார் : கைதுக்குப் பின் நாமலின் எக்ஸ் தளத்தில் வெளியான பதிவு

விசாரணைகளை எதிர்கொள்ள தயார் : கைதுக்குப் பின் நாமலின் எக்ஸ் தளத்தில் வெளியான பதிவு

சவூதி அரேபியாவில் வேலை தேடுபவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நற்செய்தி

சவூதி அரேபியாவில் வேலை தேடுபவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நற்செய்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026