கருமை நிறத்தை போக்க வேண்டுமா...! கிரீம்களுக்கு பதிலாக இதை பயன்படுத்துங்கள்
பொதுவாக நமது முகம் நன்கு பொலிவுடன் அழகாக இருக்க வேண்டும் என்று பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் ஆசைப்படுவார்கள்.
அப்படி நமது முகமும் நன்கு பொலிவு பெறவேண்டும் என்று ஆசைப்படும் நபர்களுக்காக தான் இன்றைய பதிவு.
தற்போதைய வெப்பமான காலப்பகுதியில் முகம் பொலிவிழந்து கருமையடைந்து காணப்படும். இதற்காக அதிக பணத்தை செலவு செய்து அழகு நிலையங்களில் நேரத்தை பெண்கள் மற்றும் ஆண்கள் செலவு செய்கின்றனர்.
எலுமிச்சை சாறு
1) சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, இரண்டு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை கை கால் முட்டிகளில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். பின் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்து வர ஒரு வாரத்திலே நல்ல பயனை அடைய முடியும்.
பால்
2) ஒரு சிறிய பவுலில் சிறிதளவு காய்ச்சாத பாலினை எடுத்து கொள்ளுங்கள்.

பின் அரை எலுமிச்சை பழத்தினை இந்த பாலில் தொட்டு கை மற்றும் கால் முட்டிகளில் மீது நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் சில நாட்களிலேயே கை, கால்களில் உள்ள கருமைகள் நீங்க ஆரம்பிக்கும்.
ரோஸ் வாட்டர்
3. ஒரு பவுலை எடுத்து கொள்ளுங்கள். அதில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 3 அல்லது 4 ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை கருமையாக உள்ள இடங்களில் நன்றாக அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கருமை நிறம் மாற ஆரம்பிக்கும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 3 மணி நேரம் முன்