இலங்கையில் நிலைநிறுத்தப்பட்ட அணுவாயுத எச்சரிக்கை அமைப்பு தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் 5 கடற்படை தளங்களில் நிறுவப்பட்டுள்ள 5 அணு கதிர்வீச்சு கண்டறியும் கருவிகளினதும் தரவு சேகரிப்பு தற்போது தொடங்கியுள்ளது.
குறித்த அமைப்பு நாட்டின் ஐந்து இடங்களில், முதன்மையாக கடற்படை தளங்களுக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆய்வு மற்றும் நடைமுறையாக்க பிரிவின் பணிப்பாளர் பிரகீத் கடடுன்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாட்டில் அணு மின் நிலையம் இயங்கவில்லை என்றாலும், இந்தியாவில் அமைந்துள்ள உற்பத்தி நிலையங்களிலிருந்து ஏற்படும் எந்தவொரு கதிர்வீச்சு கசிவையும் சமாளிப்பதே இதன் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அணு மின் நிலையம்
அத்தோடு, நாட்டில் அணு மின் நிலையம் நிறுவப்பட வேண்டுமானால், தேவையான ஆரம்ப ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருவதாக பிரகீத்த மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கல்பிட்டி, மன்னார், டெல்ஃப்ட், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் குறித்த ஐந்து 5 அணு கதிர்வீச்சு கண்டறியும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
