அதிபர் தேர்தல், பொதுத் தேர்தல் நடைபெறும் திகதிகள் வெளியாகின
Ranil Wickremesinghe
UNP
Election
By Sumithiran
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அதிபர் தேர்தலை நடத்திவிட்டு 2025 ஜனவரியில் பொதுத் தேர்தலை நடத்த ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.
2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு கலந்துரையாடியுள்ளது.
ரணில் விக்ரமசிங்க தலைமையில்
ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக குழு அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பிலுள்ள அதிபர் செயலகத்தில் நடைபெற்றது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு கட்சியும் அதிபர் தேர்தலில் தேசிய வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்