டேட்டிங் செயலி பயன்படுத்துபவர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Smart Phones
By Sindu
இணையவழி டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை ஊடகப் பிரிவு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
இணையவழி நட்பு, காதல் உறவுகள் மற்றும் திருமண முன்மொழிவுகள் மூலம் மோசடிக்காரர்கள் தனிநபர்களைப் பல்வேறு நிதி மோசடிகளில் சிக்க வைத்து ஏமாற்றுவதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது.
பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
தங்களுக்கு அறிமுகமில்லாத அல்லது சந்தேகத்திற்கிடமான செயலிகளைத் தங்கள் கைபேசிகளில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வங்கி விபரங்கள், ஓடிபி இலக்கங்கள், கடவுச்சொற்கள் அல்லது பிற தனிப்பட்ட தகவல்கள், அத்துடன் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அறிமுகமில்லாதவர்களுடன் பகிர்வதற்கு எதிராகவும் காவல்துறை ஊடகப் பிரிவு மக்களை எச்சரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |