மீட்க்கப்பட்ட 40 ஈரானிய மாலுமிகள்! சிறிலங்கா கடற்படையின் விசேட நடவடிக்கை

Vijitha Herath Sri Lanka Iran
By Jaso Oct 25, 2026 07:31 PM GMT
Report

காலிக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சிக்கியுள்ள வணிகக் கப்பல்களில் இருந்த 40 ஈரானிய மாலுமிகள், சிறிலங்கா கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டு ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்றுக்காலை 40 ஈரானிய மாலுமிகளும் சிறிலங்கா கடற்படையின் இரண்டு படகுகள் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டு, கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், இன்று காலை ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

மாலுமிகள் உடல்நலக் குறைபாடுகள்

காலி கடற்கரையிலிருந்து சுமார் 24 கடல் மைல் தொலைவில் இருந்த வணிகக் கப்பல்களில் இருந்த இந்த மாலுமிகள், உடல்நலக் குறைபாடுகள் காரணமாக உதவி கோரியிருந்தனர்.

மீட்க்கப்பட்ட 40 ஈரானிய மாலுமிகள்! சிறிலங்கா கடற்படையின் விசேட நடவடிக்கை | Sri Lanka Navy Rescues 40 Iranian Sailors

கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகம் இந்த மீட்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்தது. சிறிலங்கா அதிகாரிகள், காலி துறைமுகம் வழியாக இந்த மாலுமிகளை கரைக்குக் கொண்டு வருவதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த மீட்பு நடவடிக்கைக்கு வசதி செய்துகொடுத்ததன் மூலம், இலங்கை தனது மனிதாபிமானக் கடமைகளை நிறைவேற்றியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ ஏஎவ்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்

மனிதாபிமானக் கடமை

“நாங்கள் இந்த இடமாற்றத்தை ஒருங்கிணைத்து, எங்களது மனிதாபிமானக் கடமைகளைச் செய்துள்ளோம்” என்று கூறிய ரொட்ரிகோ, இந்த நடவடிக்கைகளுக்கான செலவுகளை ஈரான் தூதரகமே ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

மீட்க்கப்பட்ட 40 ஈரானிய மாலுமிகள்! சிறிலங்கா கடற்படையின் விசேட நடவடிக்கை | Sri Lanka Navy Rescues 40 Iranian Sailors

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் ஈரானிய வணிகக் கப்பல்கள் தொடர்ந்து நிலை கொண்டுள்ள சூழலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் முற்றுகை மற்றும் தடைகள் காரணமாக, இந்தக் கப்பல்களால் தங்கள் சொந்த நாட்டுத் துறைமுகங்களுக்குத் திரும்ப முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த எண்ணெய் தாங்கி கப்பல்கள், இலங்கையின் 12 கடல் மைல், பிராந்திய எல்லைக்கு அப்பால், அனைத்துலக கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கப்பல்களைக் கண்காணிப்பதற்காக, உளவு விமானங்களும் கடற்படை ரோந்துப் படகுகளும் பணியமர்த்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

போர்க்களத்தில் இருகால்களையும் இழந்து 491 நாட்கள் தவித்த உக்ரைன் வீரர் : ராட்சத ட்ரோன் மூலம் மீட்பு

போர்க்களத்தில் இருகால்களையும் இழந்து 491 நாட்கள் தவித்த உக்ரைன் வீரர் : ராட்சத ட்ரோன் மூலம் மீட்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026