வயதான தாயாரை கொன்ற மகள் அதிகாலைவேளை கைது
தனது வயதுபோன தாயாரை எவருக்கும் சந்தேகம் ஏற்படாதவகையில் கொலை செய்த மகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஹவத்தை, வெள்ளதுரை பிரதேசத்தில் கடந்த 13ஆம் திகதி இந்தக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகாலைவேளை கூரிய ஆயுதத்தால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் 71 வயதுடைய பெண்ணின் சடலம் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது.
மகளுடன் வசித்து வந்த தாய்
குறித்த பெண் தனது மகளுடன் வீட்டில் வசித்து வந்ததாகவும், மகள் வீட்டை விட்டு வெளியே சென்ற போதே இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்தேகத்திற்கிடமான கொலைச் சம்பவம் தொடர்பில் கஹவத்தை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் குறித்த பெண்ணின் மகளே இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை மகள் கைது
அதன்படி இன்று அதிகாலை 38 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை, சம்பவம் தொடர்பில் கஹவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |