23 வருடங்களுக்கு பின்னர் தனது தாயை கண்டு பிடித்த தமிழ் மகள்
தமிழகத்தில் பிறந்து வெளிநாட்டு தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட யுவதி 23 வருடங்களுக்கு பின்னர் தனது உண்மையான தாயை கண்டு பிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேரந்த அமுதா என்ற பெண் தான் பெற்றெடுத்த அமுதவள்ளி என்ற குழந்தையை வளர்க்க முடியாததால் நெதர்லாந்து தம்பதிக்கு தத்து கொடுத்துள்ளார். இதனையடுத்து குறித்த குழந்தையை நெதர்லாந்துக்கு கொண்டு சென்ற அந்த தம்பதி அங்கு வளர்தது வந்துள்ளனர்.
இதன்போது தனது உண்மையான தாய் தொடர்பான விபரம் தெரியவரவே தனக்கு கிடைத்த ஆவணங்களின் துணையுடன் அவரை கண்டு பிடித்ததாக தமிழே தெரியாத அமுதவள்ளி தெரிவித்துள்ளார்.
தனது மகள் உயிருடன் இருப்பாரா என்ற ஏக்கம் தனக்கு இருந்ததாகவும் சிலவேளைகளில் அவரை நினைத்து அழுததாகவும் தாயான அமுதா தெரிவித்தார். தற்போது தனது மகளை நேரடியாக கண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை மகளான அமுதவள்ளி தமிழ்மொழியை கற்க திட்டமிட்டுள்ளார்.
