பிரித்தானியாவில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழர்கள்: டேவிட் கெமரூன் வெளியிட்டுள்ள தகவல்
எங்கள் தேசிய வாழ்வின் பல பகுதிகளிலும் தமிழர்கள் முக்கிய பங்கினை வகிக்கிறார்கள் என பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கெமரூன்(David Cameron) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தின் (UK) பொதுதேர்தலிற்கு முன்னதாக வெளியிட்டுள்ள காணொளியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய தமிழர்களிற்கான கென்சவேர்ட்டிவ் கட்சியின் (Conservative Party) அர்ப்பணிப்பு மிகவும் உறுதியானது தளர்ச்சியற்றது என குறிப்பிட்டுள்ளதுடன் எங்கள் நாட்டின் வாழ்க்கைக்கு நீங்கள் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்குகின்றீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய தமிழர்கள்
வர்த்தகம் முதல் கற்பித்த மருத்துவம், உங்கள் உயிர்துடிப்புள்ள கலாச்சாரம் போன்றவற்றின் மூலம் நீங்கள் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்குகின்றீர்கள் . எங்கள் தேசிய வாழ்வின் பல பகுதிகளிலும் தமிழர்கள் முக்கிய பங்கினை வகிக்கிறீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
? ‘Our commitment to you is unwavering,’ David Cameron tells Tamils
— Tamil Guardian (@TamilGuardian) June 18, 2024
The UK’s Foreign Secretary @David_Cameron said his party’s commitment to British Tamils was "unwavering", as he praised the community for their "invaluable contribution to the life of our country" and pledged… pic.twitter.com/xVK0VVyacN
எமது தமிழ் சமூகத்தின் வெற்றிகள் பிரிட்டனின் எதனை சாதிக்க முடியும் என்பதற்கான ஒரு முன்மாதிரி. நாங்கள் உங்கள் அபிலாசைகளிற்கும் எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளிற்கும் எப்போதும் ஆதரவளிப்போம் என கூறினார்.
பல பிரித்தானிய தமிழர்கள் இலங்கையின் அண்மைக்கால வலிகளால் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர். இந்த வருடம் இலங்கையில் மோதல்கள் முடிவடைந்து 15 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன எனது நினைவுகள் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களை தேடுபவர்கள் குறித்ததாக உள்ளன குறித்ததாக உள்ளன என தெரிவித்துள்ளார்.
இழைக்கப்பட்ட குற்றங்கள்
15 வருடங்களிற்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்தும் டேவிட் கமரூன் குறிப்பிட்டுள்ளார்.
1948ம் ஆண்டின் பின்னர் இலங்கையின்(Srilanka) வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ( 2013 ) முதல் பிரதமர் அல்லது அதிபர் நான் என தெரிவித்துள்ள டேவிட் கமரூன் யுத்தத்தின் மோசமான விளைவுகள் குறித்து நான் நேரடியாக கேட்டறிந்துகொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
அன்று நான் வழங்கிய அர்ப்பணிப்பு இன்றும் உள்ளது நீடிக்கின்றது ,என தெரிவித்துள்ள அவர் அனைவருக்கும் நீதி உண்மை பொறுப்புக்கூறலை பிரித்தானியா ஆதரிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள் நிலைமாற்றுக்கால நீதி ஆகியவற்றிற்கான சர்வதேச முயற்சிகளிற்கு நாங்கள் தலைமைதாங்குகின்றோம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |