நிஜ்ஜாருக்கு கனேடிய நாடாளுமன்றத்தில் மௌன அஞ்சலி! இந்திய கனடா உறவில் விரிசல்
காலிஸ்தானி பிரிவினைவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு(Hardeep Singh Nijjar )கனேடிய நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இந்தியாவிலும்(India), கனடாவில்(Canada) உள்ள இந்திய சமூகத்தினரிடையேயும் சர்ச்சையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நிஜ்ஜார் இந்திய அரசாங்கத்தால் பயங்கரவாதத் தொடர்பு எனக் குற்றம் சாட்டப்பட்டு ஜூன் 2023 இல் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார்.
கனடாவில் மௌன அஞ்சலி
இந்தியாவில் காலிஸ்தானி தீவிரவாதத்தை ஊக்குவிப்பதிலும் பயங்கரவாதச் செயல்களைத் திட்டமிடுவதிலும் அவர் முக்கிய நபராகக் காணப்பட்டார்.
பஞ்சாபில் அவரது மரணம் காலிஸ்தானி பிரிவினைவாத காரணத்திற்காக ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக இருந்தது. நிஜ்ஜாரின் நினைவுநாளில் அவரது நினைவாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தும் கனடிய நாடாளுமன்றத்தின் முடிவு இந்திய அதிகாரிகளிடமிருந்தும் கனேடிய இந்திய சமூகத்தில் சிலரிடமிருந்தும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்தியர்கள் நிஜ்ஜாரை ஒரு தீவிரவாதியாக பார்க்கிறார்கள், ஒரு தலைவனாக பார்க்கவில்லை.
உறவில் விரிசல்
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஒருவரை கௌரவிப்பது தவறான செய்தியை அனுப்புவதாகவும், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய முயற்சிகளை பலவீனப்படுத்துவதாகவும் இந்தியர்கள் வாதிடுகின்றனர்.
பஞ்சாபில் சுதந்திர சீக்கிய அரசை இலக்காகக் கொண்ட காலிஸ்தானி பிரிவினைவாத இயக்கம் குறித்து இந்தியா தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது.
கணிசமான சீக்கிய மக்கள்தொகை கொண்ட கனடா, காலிஸ்தானி ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்களின் மையமாக மாறியுள்ளது என கூறப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |