மர்மமான முறையில் மீட்கப்பட்ட சகோதரிகளின் சடலங்கள்!
Sri Lanka Police Investigation
Crime
Death
By Dharu
ஆள் நடமாட்டம் இல்லாத வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் இறந்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இன்று (02) பிற்பகல் குறித்த பெண்கள் தங்கியிருந்த தெரணியகல - மல்தெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டிலேயே இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
49 மற்றும் 51 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மரணங்கள் சந்தேகத்திற்குரியவை
இரண்டு நாட்களுக்கு முன் இருவரும் இறந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இவர்கள் உயிரிழந்த வீட்டில் இருந்த 90 வயதுடைய பெண் ஒருவர் தற்போது தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த மரணங்கள் சந்தேகத்திற்குரியவை எனவும் சம்பவம் தொடர்பில் தெரணியகல காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 20 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்