தொடருந்தில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு - மட்டக்களப்பில் சம்பவம்
Death Penalty
Accident
Death
By Kiruththikan
மட்டக்களப்பு தொடருந்து நிலைய தொடருந்து கடவையில் இருந்து ஆணொருவரின் சடலம் புத்தாண்டு தினமான இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் சத்துருக்கொண்டான் பகுதியை சேர்ந்த ராசநாயகம் ரமேஸ்குமார் (45 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் நேற்று வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல் போயிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
இந்நிலையில் குறித்த நபர் நேற்று வியாழக்கிழமை இரவு பயணித்த தொடருந்து அல்லது இன்று அதிகாலை பயணித்த தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்ட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி