உயிரிழந்து கரை ஒதுங்கும் ஆமைகள் - வெளியானது காரணம்
death
turtles
x press pearl
By Jaso
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ ஆமைகளை பாதித்திருக்கக்கூடும் என்று வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் டொக்டர் லலித் ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறிக்கப்பட்ட ஆமைகளின் பாதையில் இருந்து இது தெளிவாவதாகவும் அவர் குறிப்பிட்டார்
ஆமைகள் முட்டையிடுவதற்கான அதிகபட்ச காலம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களாகும், மேலும் ஆமைகளுக்கும் கப்பல் ஆபத்தில் இருந்த நேரத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாக அவர் கூறினார்.
கொழும்பு அருகே ஆமைகளின் பாதை கடலுக்கு குறுக்கே உள்ளதாகவும், முட்டையிடுவதற்கு வந்த ஆமைகள் தீவிபத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் முடிவு செய்யலாம் என அவர் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி