நேபாளத்தை புரட்டிப் போட்ட வெள்ளம்: ஈஷா சேர்ந்த 77 பேரைக் காணவில்லை - சத்குரு வெளியிட்ட பயங்கர காணொளி
நேபாளத்தில் கிராமங்களைச் சூறையாடி, பாலங்களையும் வீடுகளையும் அடித்துச் சென்ற வெள்ளத்தில் இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்றும் 157 உடல்கள் மீட்கப்பட்டதாகவும்இ அபாயகரமான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நேபாள காவல்துறை புதன்கிழமை இரவு தெரிவித்துள்ளது.
திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து சுமார் 403 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போனதாகவும் அவர்களில் 341 பேர் வெளிநாட்டினர் என்றும் நேபாள சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
யாத்ரீகர்கள் காணாமல் போயுள்ளனர்
இதேவெளை நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் சத்குருவின் ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த குறைந்தது 77 யாத்ரீகர்கள் காணாமல் போயுள்ளனர்.
A terrible and tragic flash flood has taken place at Gyirong in Tibet - China, and one of our Kailash groups was caught in it. While on their way back, they were at the immigration office when the flood occurred and the building and much of the town seems to have been flooded.… pic.twitter.com/CqOBxsPlWo
— Sadhguru (@SadhguruJV) August 26, 2026
திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவரில் இருந்து திரும்பி வரும் வழியில் அந்தக் குழுவினர் குடிவரவு அலுவலகத்தில் இருந்ததாக அவா் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவா்களது நிலை குறித்து அதிகாரபூா்வ தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த யாத்திரையில் பங்கேற்ற 21 குழுக்களில் 495 போ் ஏற்கெனவே பாதுகாப்பாகத் திரும்பிவிட்டனா். தற்போது 743 போ் திபெத்திலும், 148 போ் நேபாளத்திலும் பாதுகாப்பாக உள்ளனா் என தெரிவித்துள்ளாா்.
அவர் வெளியிட்ட காணொளியில் திபெத்தின் கிரியோங் துறைமுகப் பகுதியில் சீறிப்பாயும் ஒரு பிரம்மாண்டமான அலை, குடிவரவு அலுவலகத்தின் மீது சரிந்து, பின்னர் ரசுவாவிற்குள் புகுந்து, போட் கோசி ஆற்றங்கரை நெடுகிலும் பேரழிவை ஏற்படுத்தியதைக் காட்டுகின்றன.
மீட்பு மற்றும் சீரமைப்புப் பணி
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிகழ்ந்த துயரமான உயிரிழப்புகளை அறிந்து தாம் ஆழ்ந்த வேதனையடைவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் நேபாளத்திற்கு உதவ இலங்கை தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெறும் 10 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு மோசமான புயலில் இருந்து இன்னும் மீண்டு வரும் ஒரு நாடு என்ற வகையில், நேபாள மக்களின் துயரத்தில் இலங்கையும் பங்குகொள்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் மற்றும் நேபாள மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் அனைத்து இலங்கை மக்களும் ஒன்றிணைந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |