எகிப்தை உலுக்கிய பாரிய தொடருந்து விபத்து: நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்...!
எகிப்தில் இரண்டு பயணிகள் தொடருந்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
நாட்டின் தலைநகர் கெய்ரோவிற்கு தெற்கே அமைந்துள்ள கீசா (Giza) மாகாணத்தின் அல்-அயாத் (Al-Ayyat) பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
தொடருந்து அதிகாரிகள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கெய்ரோவிலிருந்து அஸ்வான் (Aswan) நோக்கிச் சென்ற தொடருந்து, பாதையில் நின்று கொண்டிருந்த போது கீசாவிலிருந்து பயூம் (Fayoum) நோக்கிப் பயணித்த மற்றொரு தொடருந்து பின்னால் வந்து அதிவேகமாக மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
Seven people have been killed and 112 injured after two passenger trains collided and derailed in Giza’s El-Ayyat district, according to Egypt’s Ministry of Health. Emergency teams were deployed to rescue passengers and clear the wreckage. https://t.co/TJsD1wmBrC
— Al Jazeera English (@AJEnglish) November 8, 2026
மோதிய வேகத்தில் தொடருந்தின் சில பெட்டிகள் தடம் புரண்டு பலத்த சேதமடைந்துள்ளன.
விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக எகிப்து தொடருந்து அதிகாரிகளும் மற்றும் அவசர மீட்புக் குழுவினரும் கிரேன் போன்ற கனரக இயந்திரங்களுடன் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தொடருந்து விபத்துகள்
விபத்தில் படுகாயமடைந்த 110 இற்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசி (Abdel Fattah el-Sissi) இந்த விபத்து குறித்து உடனடியாகத் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் புலனாய்வுக் குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்திற்கான காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர்.
தடம்புரண்ட பெட்டிகளை அகற்றி தொடருந்து சேவையை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
எகிப்தில் தொடர்ச்சியாக ஏற்படும் தொடருந்து விபத்துகள் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டிலிருந்து பெருமளவு ட்ரோன்களுடன் வந்திறங்கிய எதிரணி எம்.பி : சுங்கத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |