அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பதிலடி கொடூரமாக இருக்கும்: ஈரான் கடும் எச்சரிக்கை

United States of America Israel Iran World
By Shalini Balachandran Nov 08, 2026 07:02 PM GMT
Report

அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் தங்கள் மீது ஏதேனும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு தவறிழைத்தால் ஈரானின் பதிலடி மிகவும் கொடூரமானதாகவும் பேரழிவை ஏற்படுத்துவதாகவும் அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) விண்வெளிப் பிரிவின் தளபதிக்கான ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் அலி பெலாலி (Ali Belali) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தங்களுக்குத் தேவையான ஆயுதப் பொருட்கள் மற்றும் தளவாடங்கள் என்பன எதிர்காலத்தில் பல ஆண்டுகளுக்கு போதுமான அளவு பாதுகாப்பாக கையிருப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து பெருமளவு ட்ரோன்களுடன் வந்திறங்கிய எதிரணி எம்.பி : சுங்கத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை

வெளிநாட்டிலிருந்து பெருமளவு ட்ரோன்களுடன் வந்திறங்கிய எதிரணி எம்.பி : சுங்கத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை

ஈரானிய ஆயுதப்படைகள்

பிரிகேடியர் ஜெனரல் அலி பெலாலி டெலிகிராம் (Telegram) தளத்தில் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பதிலடி கொடூரமாக இருக்கும்: ஈரான் கடும் எச்சரிக்கை | Irgc Warns Us And Israel Of Attack Risk

ஈரானிய ஆயுதப்படைகள் எப்போதும் போருக்குத் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எதிரி நாடுகள் மீண்டும் ஏதேனும் இராணுவத் தவறுகளைச் செய்தால் ஈரான் சற்றும் தயங்காமல் மிகக் கடுமையான எதிர்த்தாக்குதலைத் தொடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரமலான் போருக்குப் பிந்தைய காலத்தில் ஈரானியப் படைகள் தங்களது இராணுவத் திறன்களையும் ஏவுகணை மற்றும் ட்ரோன் உற்பத்திகளையும் கணிசமாக உயர்த்தியுள்ளதாகத் மூத்த இராணுவத் தளபதிகள் தெரிவித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

36 வருட காத்திருப்பு வீண் போனது : சொந்த மண்ணில் குடியேற ஆசைப்பட்ட தாய் பரிதாபகரமாக உயிரிழப்பு

36 வருட காத்திருப்பு வீண் போனது : சொந்த மண்ணில் குடியேற ஆசைப்பட்ட தாய் பரிதாபகரமாக உயிரிழப்பு

இராணுவ நடவடிக்கை

மேலும், “இன்றைய சூழலில் எதிரி (அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்) முதிர்ந்து பலவீனமடைந்து வீழ்ச்சியடைந்துள்ளது.

நேரடியாக இராணுவ ரீதியாக எங்களை எதிர்கொள்ளும் திறன் அவர்களிடம் இல்லை அதனால் அவர்கள் நமது நாட்டு மக்களின் ஒற்றுமையை உடைக்கப் பார்க்கிறார்கள்.

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பதிலடி கொடூரமாக இருக்கும்: ஈரான் கடும் எச்சரிக்கை | Irgc Warns Us And Israel Of Attack Risk

மக்கள் தொடர்ந்து ஒற்றுமையுடன் இருக்கும் வரை அந்த ஒற்றுமையே நமது வெற்றிக்கு முக்கியத் திறவுகோலாக அமையும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுக்கும் எந்தவொரு இராணுவ நடவடிக்கைகளுக்கும் அல்லது தாக்குதல்களுக்கும் உதவி புரியும் பிராந்திய நாடுகள் மற்றும் தளங்கள் அனைத்தும் ஈரானின் நியாயமான இலக்குகளாக மாற்றப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும் IRGC முன்னதாக எச்சரித்திருந்தது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ச்சியாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்கள் நிலவி வரும் வேளையில் ஈரானிய இராணுவத் தளபதிகளின் இந்தத் தொடர் எச்சரிக்கைகள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டாளி நாடுகளிடையே பெரும் பரப்பரப்பையும் பாதுகாப்பு குறித்த கேள்வி நிலையையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தில் மூழ்கியது கண்டி மருத்துவமனை

வெள்ளத்தில் மூழ்கியது கண்டி மருத்துவமனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026