காது கேளாத நபரின் கோடிக்கணக்கான மோசடி அம்பலம்
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
By Sumithiran
காது கேளாதவர்களின் எதிர்காலம் கருதி சங்கம் ஒன்றை உருவாக்கி தனது கணக்கில் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த காது கேளாத நபர் ஒருவர் தொடர்பில் காவல்துறை மோசடி விசாரணைப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்காக போலி அமைப்பையும் சம்பந்தப்பட்ட நபர் உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்வதற்கான நடவடிக்கை
மேலும் தங்கள் சங்கத்திற்கு கடன் கொடுக்கும் நபர்களுக்கு அதிக சலுகைகள் தருவதாக கூறி பணம் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த மோசடி காது கேளாத நபர் வெளிநாட்டில் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறை மோசடி விசாரணை பிரிவினர் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்