புதைப்பதா? எரிப்பதா? இது ஒரு தேசிய பிரச்சினையே அல்ல
கொரோனா தொற்று ஏற்பட்டு மரணமடைந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என்பது தேசிய பிரச்சினையே இல்லை என ஆளும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இன்றையதினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசிய பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில், உடலங்களை என்ன செய்வது என்பது தொடர்பாக ஆராய்வதற்காக 202 0இல்குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறிப்பிட்ட குழு இது குறித்த தீர்மானத்தை எடுக்கும். கொரோனா வைரஸ் தொடர்பாக முடிவெடுப்பதற்கான அதிகாரம் வேறு எந்த குழுவிற்குமில்லை.ஏனைய குழுக்களால் ஆராயமாத்திரம் முடியும். உடல்கள் தொடர்பான விவகாரம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது சில குழுக்கள் இதனை தேசிய பிரச்சினையாக மாற்ற முயல்கின்றன எனவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் வைரசினால் பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காகவும் கொரோனா தொடர்பான மரணங்களை தடுப்பதற்காகவும் கொரோனா பாதிப்பின் மத்தியிலும் அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்காகவும் கொரோனா பரவலை தடுப்பதே தேசிய பிரச்சினை என அவர் குறிப்பிட்டுள்ளார்.