தமிழ் தொழிலதிபர் மரணம் - காவல்துறை வெளியிட்ட விசேட அறிவிப்பு
Sri Lanka Police
Sri Lanka
Crime
By Sumithiran
பிரபல தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரப்பப்படுவது விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலைமை சந்தேக நபர்களுக்கு நன்மை பயக்கும் எனவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உறுதிப்படுத்தப்படாத தகவல்
இதனால், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு காவல்துறை ஊடகப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 15 ஆம் திகதி பொரளை மயானத்தில் வாகனத்தில் ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஷாப்டர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பல திணைக்களங்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்