கொழும்பில் நடந்த மர்மக்கொலை! இதுவரையில் 67 பேர் கைது
Sri Lanka Police
Sri Lanka
Death
By pavan
மிரிஹான, கங்கொடவில பகுதியில் உள்ள வாகன கராஜ் ஒன்றில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் இந்த கொலை தொடர்பாக இதுவரையில் 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு குறித்த இளைஞன் சந்தேகநபருடன் மதுபான விருந்து நடத்தியதாகவும், இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து குறித்த இளைஞன் சந்தேக நபரை தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.
உறங்கிக் கொண்டிருந்த போது
குறித்த இளைஞன் நேற்று (02) கராஜ் ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த போது சந்தேக நபர் ஆயுதத்தால் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மிரிஹான தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்