இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அரச தரப்பின் அறிவிப்பு

Sri Lanka Rajapaksa Family India Bimal Rathnayake NPP Government
By Sathangani Aug 21, 2025 03:43 AM GMT
Report

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம். அவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (20) நடைபெற்ற சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, “யுத்தத்தினால் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்ற ராமசாமி தேவராஜா, தேவராஜா புஸ்பராணி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் சபையில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டன.

நாடு திரும்பும் இலங்கை ஏதிலிகள் கைதுசெய்யப்படும் விவகாரம் : தமிழ் எம்.பி கோரிக்கை

நாடு திரும்பும் இலங்கை ஏதிலிகள் கைதுசெய்யப்படும் விவகாரம் : தமிழ் எம்.பி கோரிக்கை

இலங்கை குடியுரிமை

யுத்தகாலத்தில் தான் இவர்கள் அகதிகளாக நாட்டை விட்டுச் சென்றுள்ளாளர்கள். யுத்த சூழலின் போது எவரும் சட்டரீதியாக அகதிகளாக செல்வதில்லை. உலக நாடுகளிலும் அவ்வாறான தன்மையே காணப்படும்.

தமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் எவ்வழியிலாவது நாட்டை விட்டுச் செல்வார்கள். இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகாலமாக அகதிகளாக வாழும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்றளவில் தீர்க்கப்படவில்லை.

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அரச தரப்பின் அறிவிப்பு | We Will Take Responsibility Sl Refugees In India

110,000 இலங்கையர்கள் இந்தியாவில் அகதிகளாக இருந்ததாக குறிப்பிடப்பட்டது. இதில் 28,500 பேர் இலங்கை குடியுரிமையும், இந்திய குடியுரிமையும் இல்லாத நிலையில் இருந்தார்கள்.

இவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பங்குப்பற்றலுடன் நாடாளுமன்றத்துக்கு பிரேரணையொன்றை கொண்டு வந்தோம். ஒரு உறுப்பினரை தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் அந்த பிரேரணைக்கு ஆதரவளித்தார்கள். இதன் பின்னரே அந்த 28,500 பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சுமார் 6,000 பேர் வரையிலானோர் இலங்கைக்கு வந்து மீள்குடியேறியுள்ளார்கள். இந்தியாவில் அகதிகளாக இருந்து இலங்கைக்கு திரும்பியவர்களை மீள்குடியமர்த்த தனிப்பட்ட முறையில் தலையீடு செய்துள்ளேன்.

மகிந்தவை நிம்மதியாக இருக்க விடுங்கள் : நாமலிடம் கோரிக்கை

மகிந்தவை நிம்மதியாக இருக்க விடுங்கள் : நாமலிடம் கோரிக்கை

கனகபுரம், பாரதிபுரம் ஆகிய பிரதேசங்களுக்கும் சென்று மீள்குடியேற்ற பணிகளை ஆராய்ந்துள்ளேன். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் அகதிகளை கைது செய்வதாக தற்போது குறிப்பிடப்படுகிறது.

சின்னையா சிவலோகநாதன் என்பவர் நாடு திரும்பிய போது அவர் யாழ்.பலாலி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இவ்விடயத்தில் நான் தலையீடு செய்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களுடன் சிவலோகநாதன் என்பவர் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இலங்கைக்கு வரும் அகதிகளை கைது செய்வது அரசாங்கத்தின் கொள்கையல்ல, அவ்வாறு கைது செய்வது தவறு. நாங்கள் நாட்டை நிர்வகிக்கிறோமே தவிர குடும்பத்தை நிர்வகிக்கவில்லை. அரச அதிகாரிகளில் ஒருசிலர் செய்யும் தவறுகளை அரசாங்கத்தின் தவறு என்று குறிப்பிடுவது முறையற்றது.

ஏதாவது ஒரு விடயத்தை பிடித்துக் கொண்டு அரசாங்கத்தின் மீது சேறுபூசுவதை ஒரு தரப்பினர் தற்போது பிரதான செயற்பாடாக கொண்டுள்ளார்கள். வடக்கிலும் தெற்கிலும் இனவாதிகள் தற்போது அநாதையாகியுள்ளார்கள்.

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே ஆரோகணித்த நல்லூர் கந்தன்

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே ஆரோகணித்த நல்லூர் கந்தன்

 தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்

தமிழ் அகதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேண்டுமென்றே நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்கிறது என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஒருசிலர் பல்வேறு வகையில் செயற்படுகிறார்கள்.

ராஜபக்சர்களின் அவதாரமாகவே இவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் இனவாதத்துடன் செயற்படுகிறார்கள். இந்தியாவில் அகதிகளாக இருந்த ராமசாமி தேவராஜா, தேவராஜா புஷ்பராணி ஆகிய இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அரச தரப்பின் அறிவிப்பு | We Will Take Responsibility Sl Refugees In India

இலங்கையில் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம் உள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் 45(1)பி அத்தியாயத்தின் 34 ஆவது பிரிவின் பொது காரணிகளுக்கு அமைவாகவே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

நாட்டுக்கு வரும் அகதிகள் இவ்வாறு கைது செய்யப்படுவது கவலைக்குரியது. இருப்பினும் அதற்கு ஏதேனும் சட்ட காரணிகள் இருக்கும். இந்த சட்ட விடயங்களை திருத்துவதற்கான இயலுமை காணப்படுகிறது.

தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் கடந்த காலங்களில் சட்ட திருத்தத்துக்கான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம்.முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்குவோம்.

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அரச தரப்பின் அறிவிப்பு | We Will Take Responsibility Sl Refugees In India

அமைச்சு மட்டத்தில் பேசுவோம்

இந்த இரண்டு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் ஏன் இடைநிறுத்தியது என்பதை அறியவில்லை. கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணையளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அரச தரப்பின் அறிவிப்பு | We Will Take Responsibility Sl Refugees In India

இச்சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகாமுடன் அமைச்சு மட்டத்தில் பேசுவோம். இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி அவர்களை இலங்கை பிரஜைகளாக்க உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

சட்டத்தில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் நீதியமைச்சுடன் கலந்துரையாடி இவ்வாறான கைதுகளை நிறுத்த நடவடிக்கை எடுப்போம்.அதிகாரிகள் இழைக்கும் தவறை இனவாதம் என்று குறிப்பிட வேண்டாம்.

தமிழர்கள் என்பதால் இவர்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்று முதலமைச்சர் பதவி கனவுடன் இருப்பவர்கள் குறிப்பிடலாம், ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு குறிப்பிடுவது அழகல்ல, குறைப்பாடுகளை சுட்டிக்காட்டுங்கள் அதனை விடுத்து இனவாத செயற்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்காதீர்கள்” என்றார்.

அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்ற வர்த்தக நிலையத்திற்கு அபராதம்

அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்ற வர்த்தக நிலையத்திற்கு அபராதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
நன்றி நவிலல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நவாலி வடக்கு

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025