பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே ஆரோகணித்த நல்லூர் கந்தன்
புதிய இணைப்பு
நல்லூர் கந்தனின் தேர்திருவிழா நாளான இன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
இன்றைய தேர்த்திருவிழாவை காண நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும், சிதறு தேங்காய் உடைத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர்.
நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் இன்று தேர் திருவிழா இடம்பெறுவதுடன் நாளைய தினம் காலை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவானது பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.
இன்றைய (21) 24ஆம் நாள் திருவிழாவின் காலை நேர பூஜைகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ள நிலையில் தேர்த்திருவிழா சற்று முன்னர் ஆரம்பமானது.
அலங்காரக் கந்தனின் திருவழகைக் காண ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
கடந்த மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ நிகழ்வுகளை உங்கள் IBC Tamil TV, LankaSri News மற்றும் IBC Tamil News ஆகிய YouTube தளங்களில் நேரலையாக காண முடியும்./
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
