கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுமி பலி - யாழில் சம்பவம்
Jaffna
Sri Lanka
By pavan
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் பாதுகாப்பற்ற வீட்டு கிணற்றில் விழுந்த சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மிருசுவில் வடக்கு, மிருசுவிலைச் சேர்ந்த சசிகரன் கிங்சிகா என்ற 6வயது சிறுமியாவார்.
மிருசுவில் வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று வரும் மேற்படி மாணவி வீட்டிலிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் நேற்று சனிக்கிழமை (27) மாலை விழுந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சிறுமியை காணாத நிலையில் தேடிய போது கிணற்றில் சிறுமி விழுந்தமை தெரியவந்துள்ளது.
உடனடியாக மீட்கப்பட்டு கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி