பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மின்சார தாக்குதல் - இருவர் பலி
மட்டக்களப்பு அமிர்தகழி பிரதேசத்தில் வீடு ஒன்றில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (14) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இருதயபுரத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ரொக்கி சைய்டே மற்றும் கருவப்பங்கேணியைச் சேர்ந்த 25 வயதுடைய ஞானபிரகாசம் கோடிசன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அமிர்தகழி பாடசாலை வீதியிலுள்ள மேல்மாடி வீட்டின் ஒருபகுதியில் இன்று காலையில் 3 தச்சு தொழிலாளர்கள் கூரையில் திருத்த வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
வைத்தியசாலையில் அனுமதி

இதன் போது பகல் 11 மணியளவில் கூரையின் இருந்த தகரம் கழன்று வீதியில் இருந்து வீட்டிற்கு வரும் மின்சார வயரினை வெட்டியதையடுத்து தொழிலாளர்கள் மீது மின்சாரம் தாக்கியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான மூவரையும் வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து இருவர் உயிரிழந்தமை உறுதிசெய்யப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.