இஸ்ரேல் பின்வாங்காது.! நெதன்யாகு அதிரடி
இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லெபனான் பகுதிக்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அங்குள்ள வீரர்களிடம் உரையாற்றிய அவர், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் அச்சுறுத்தல் நீடிக்கும் வரை இஸ்ரேல் லெபனானின் தெற்குப் பகுதியில் இருந்து பின்வாங்காது என்று அறிவித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் பகுதி
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மற்றும் லெபனான் அரசாங்கங்களுக்கு இடையே எட்டப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்திற்குப் பிறகு, நெதன்யாகு ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் பகுதிக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.

Image Credit: timesofisrael
இந்த நிலையில், “அச்சுறுத்தல் நீங்கும் வரை நாங்கள் தெற்கு லெபனானை விட்டு வெளியேற மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்று நெதன்யாகு ராணுவ வீரர்களிடம் கூறியதாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லாவின் அச்சுறுத்தல்
மேலும், "ஹிஸ்புல்லா ஆயுதங்களுடனும் அச்சுறுத்தலாகவும் இங்கு இருக்கும் வரை, நாங்களும் இங்கேயே இருப்போம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Image Credit: Al Jazeera
கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் பகுதிக்கு முதன்முறையாக பகிரங்கமாக விஜயம் செய்துள்ள நெதன்யாகுவுடன், பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளும் உடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |