இந்தோனேசியாவில் மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இலங்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு
Tsunami
Sri Lanka
Indonesia
Earthquake
By Jaso
வெளிநாட்டு தகவல்களின்படி, இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் இன்று பிற்பகல் (15) 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதன்படி, இன்று காலை நாட்டைத் தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்த உயிரிழப்பு
ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், இன்று அதிகாலை சுமார் 3.28 மணியளவில் இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 38 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை
இன்று பிற்பகல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தேசிய சுனாமி முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

கடலோரப் பகுதிகளில் மக்களின் வாழ்வு பாதுகாப்பாக உள்ளது என்று அந்த மையம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்