அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் பலி
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அப்பகுதியில் அமைந்துள்ள இரண்டு வீடுகளை இலக்காகக் கொண்டு இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு
சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டை நடத்திய பின்னர் சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்ததையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக மிச்சிகன் பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
இந்நிலையில், பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கைகளுக்கு மத்தியில், சந்தேகநபரின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஆறு பேரில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகக் கூறப்படும் நபரும் உள்ளடங்கியுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மிச்சிகன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |