ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்தை தொடர்பில் கத்தார் வெளியிட்ட அறிவிப்பு
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கத்தார் அறிவித்துள்ளது.
இருப்பினும், தற்போதுள்ள பேச்சுவார்த்தை வழிமுறைகளின் கீழ் இரு தரப்புக்கும் இடையே உயர்மட்ட சந்திப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் கத்தார் தெளிவுபடுத்தியுள்ளது.
உயர்மட்ட சந்திப்புகள்
கத்தார் பிரதமரின் ஆலோசகரும், வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளருமான மஜித் அல்-அன்சாரி ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை வழிமுறையின் கீழ், ஈரானிய மற்றும் அமெரிக்க தரப்புகளுக்கு இடையே தற்போது உயர்மட்ட சந்திப்புகள் எதுவும் நடைபெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில், முன்னதாக சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சந்திப்புகளைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையிலான தொழில்நுட்ப அளவிலான தொடர்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து பேணப்பட்டு வருவதாக அல்-அன்சாரி கூறியுள்ளார்.

Image Credit: Yahoo
இதன்படி, தோஹாவிலும் மற்ற இடங்களிலும் இந்த பேச்சுவார்த்தை செயல்முறையைத் தொடர்வதற்காக மத்தியஸ்தர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 11 மணி நேரம் முன்