யாழில் கசிப்பு அருந்திய இளைஞனுக்கு நடந்த அவலம்!
Jaffna
By pavan
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் கசிப்பு அருந்திய நிலையில் இளைஞர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நிறைபோதையில் இருந்த குறித்த இளைஞன் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார்.
முதற்கட்ட விசாரணை
அவரை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த இளைஞன் கசிப்பு அருந்தியிருந்தார் என்ற முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஊர்காவற்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் புங்குடுதீவில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும், வேறு பிரதேசங்களில் இருந்து இங்கு கடத்தி வரப்படுவதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
