சுனாமியில் தப்பிச் சென்ற மரணதண்டனை கைதி 19 வருடங்களின் பின்னர் சிக்கினார்
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது தப்பியோடிய மரண தண்டனை கைதி ஒருவர் 19 வருட காலத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2001ஆம் ஆண்டு ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் மற்றும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது
2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த கைதி தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேகநபர் இல்லாமல் நடத்தப்பட்ட வழக்கில்
சந்தேகநபர் இல்லாமல் நடத்தப்பட்ட வழக்கில், 2012ஆம் ஆண்டு மே மாதம் சந்தேகநபரின் சகோதரர் விடுவிக்கப்பட்ட நிலையில், காணாமல் போன சந்தேக நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
எனினும், தற்போது 54 வயதான சந்தேக நபர், ராகம நகரில் வைத்து நேற்று (14) இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
