விறகு சேகரிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த துயரம்!!
today
death
sammanthurai
By Vanan
யானைக்கான பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்ட பதின்மூன்று வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (12) மதியம் பதிவாகியுள்ளது.
சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் சம்மாந்துறை காவல்துறை பிரிவில் உள்ள நெய்னாகாடு எனும் கிராமத்தில் பட்டம்பிட்டிய எனும் பின்தங்கிய இடத்திலுள்ள தென்னத்தோப்பில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த தென்னத்தோப்பிற்கு வழமை போன்று விறகு சேகரிக்கச் சென்ற போது றியாஸ் முஹம்மட் ஆசீக் (13வயது) முஹம்மட் இப்றாஹிம் (13வயது) என்ற இரண்டு சிறுவர்களே மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை காவல்துறையினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி