ஊடகவியலாளர் மெலிசா கொலை - குற்றவாளிக்கு மரண தண்டனை
ஊடகவியலாளர் மெலிசா குணசேகர கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வர்ணப்பூச்சாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
சம்பத் அபேகோன் மற்றும் பி. குமரன் இரத்தினம் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பத்தரமுல்ல சுப்புதிபுரவில் உள்ள ஊடகவியலாளர் மெலிசா குணசேகரவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளையடித்து, கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், அருளானந்த அந்தோனி ரம்சன் ஜோர்ஜ் 2014 பெப்ரவரி 2 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அதன்படி, 2017 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் திகதி, கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிய குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன், அத்துமீறி நுழைந்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் அவருக்கு மரண தண்டனையும் சிறைத்தண்டனையும் விதித்தது.
பின்னர், தன்னை விடுதலை செய்து விடுவிக்கக் கோரி, பிரதிவாதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
