சஜித் அணி எம்பிக்கு கொலை மிரட்டல்! உடன் நடவடிக்கைக்கு வலியுறுத்து
தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (24.10.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உடனடி நடவடிக்கை
அவர் மேலும் கூறுகையில், “தன்னை கொல்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மா அதிபர், களுத்துறை மாவட்ட சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வீட்டிலிருந்து வெளியே வரும் போது, என்னைக் கொல்ல திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, குறித்த அச்சுறுத்தல் தொடர்பாக சபாநாயகர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, இந்த விவகாரம் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி உறுதியளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |