3 ஆயிரத்து 500ஐ கடந்தது கொவிட் பலி
covid
sri lanka
death
By Vanan
நாட்டில் நேற்றைய தினம் (10) மேலும் 35 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். இத்தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த 35 பேரில், 17 ஆண்களும் 18 பெண்களும் உள்ளடங்குவதா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இதுவரையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,502 ஆக அதிகரித்துள்ளதோடு, மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 273,031 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 244,437 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி