6.9 அளவில் பயங்கர நிலநடுக்கம் - கட்டங்களுக்குள் புதைந்த மக்கள்: அதிகரிக்கும் பலி
புதிய இணைப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேதம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 150 பேர் காயமடைந்துள்ளதாக பிராந்திய சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் ஜேன் அபாபோ தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
பிலிப்பைன்ஸ் (Philippines) நாட்டில் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய பிலிப்பைன்ஸின் விசயாஸ் பகுதியில், செபு மாகாணத்தின் போகோ நகருக்கு அருகில் நேற்றிரவு (30) இரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 147 பேர் காயமடைந்துள்ளதாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மின்சாரம் துண்டிப்பு
இதனால் செபு மாகாணத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கட்டிடங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் வரலாற்று சிற்றாலயங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
போகோ நகரில் உள்ள விளையாட்டு அரங்கம் இடிந்து, அங்கு கூடியிருந்தவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. செபு நகரில் சுமார் 10.6 இலட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மீட்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுனாமி அச்சுறுத்தல் இல்லை
பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (Phivolcs) சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று உறுதியளித்துள்ளது.
இருப்பினும் சிறிய கடல் அலை அச்சுறுத்தல் காரணமாக கடற்கரை பகுதிகளை விட்டு விலக இருந்ததாக அறிவுறுத்தியது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
