வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம்! (நேரலை)
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் நேற்று(13) சமர்ப்பிக்கப்பட்டது.
அவ்வகையில், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று(14) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையான 7 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
அதற்கமைய இன்று காலை 9 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
இரண்டாம் மதிப்பீடு
அதன் பின்னர் வரவு செலவுத் திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 5.30 க்கு இடம்பெறவுள்ளது.
குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி மாலை 5.30 க்கு இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்தல்
வரவு செலவுத் திட்ட விவாதம் இடம்பெறும் காலப்பகுதிக்குள் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் முன்னிலையாவது கட்டாயமாகும்.
விவாதம் இடம்பெறும் காலப்பகுதியில் நாடாளுமன்றத்தில் இருக்கும் வகையில் தங்களின் ஏனைய செயற்பாடுகளை முறைமைப்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும் கட்சியின் பிரதம கொறடா அலுவலகம் அறிவித்துள்ளது.